காரிமங்கலம்:
காரிமங்கலத்தில் மலை குன்றின் மீது அபித குஜாம்பாள் சமேத அருணேஸ்வரர் கோவில் உள்ளது. பழமைவாய்ந்த இந்த கோவிலை புனரமைக்கவும், திருப்பணி மேற்கொள்ளவும் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.82 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்த நிதியில் சுமார் ரூ.8 லட்சத்தை அரசுக்கு அதிகாரிகள் திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இந்து அறநிலையத்துறை சேலம் இணை ஆணையர் மங்கையர்கரசி மற்றும் அதிகாரிகள் அருணேஸ்வரர் கோவிலில் நடந்து வரும் திருப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது திருப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ள ரூ.30 லட்சம் மதிப்பில் திட்ட அறிக்கை அளிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்தவுடன் பணிகள் சில மாதத்திற்குள் முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆய்வின்போது உதவி ஆணையர் உதயகுமார், செயல் அலுவலர் சிவக்குமார், அர்ச்சகர் புருஷோத்தமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.