இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு

ஓசூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கலெக்டர் தீபக் ஜேக்கர் ஆய்வு செய்தார்.

Update: 2023-03-29 18:45 GMT

ஓசூர்

ஓசூர் சிப்காட் பகுதியில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், தினசரி நோயாளிகளின் வருகை பதிவேடுகள் மற்றும் மருந்து இருப்புகளை ஆய்வு செய்தார். நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று டாக்டர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து நோயாளிகளிடம் குறைகள் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, டாக்டர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்