பஞ்சப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தரச்சான்று குழுவினர் ஆய்வு

Update: 2023-02-23 18:45 GMT

பாலக்கோடு:

பஞ்சப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தரச்சான்று குழுவினர் ஆய்வு செய்தனர்.

ஆரம்ப சுகாதார நிலையம்

பாலக்கோடு அருகே உள்ள பஞ்சப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தர உறுதி, தர நிலைகள் மற்றும் தரச்சான்று குழுவினர் ஆய்வு செய்தனர். அசாம் மற்றும் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த தேசிய தர நிலை மதிப்பீட்டாளர்களான டாக்டர் புனித், டாக்டர்குஞ்சால் ஆகியோர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். அவர்களுக்கு மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் சவுண்டம்மாள் தலைமையில், வட்டார மருத்துவ அலுவலர் சிவகுரு முன்னிலையில் யோகா நிகழ்ச்சியுடன் கூடியவரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து தேசிய தரச்சான்று குழுவினர் ஆஸ்பத்திரியில் அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்தனர். அப்போது புறநோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், தாய்-சேய் நலம், தடுப்பூசி செலுத்தும் பணி ஆகியவற்றை பார்வையிட்டனர்.

ஆலோசனை

மேலும் மக்களை தேடி மருத்துவ திட்ட செயல்பாடு, காசநோய், பல் மற்றும் யோகா இயற்கை மருத்துவம் ஆகியவை குறித்தும் கேட்டறிந்தனர். தொடர்ந்து கிராமப்புறம் மற்றும் மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்ச்சை முறைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். மேலும் சிகிச்சைக்கு வந்திருந்த பொதுமக்களிடம் நலம் விசாரித்து, அங்கு அளிக்கப்படும் மருத்துவ சேவை குறித்து கேட்டறிந்தனர்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட தரநிலை அலுவலர் டாக்டர் வனிதா, டாக்டர் கங்காதரன், அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் வெஷிகா அபிநயா, மோகன ஈஸ்வரி, மரியா, ஆனந்த ஜோதி, நவீன், பிரித்திவி ராஜ் மற்றும் பலர் உடன்இருந்தனர்.

மேலும் செய்திகள்