பாலக்கோடு:
பாலக்கோடு நெடுஞ்சாலை துறை உட்கோட்டத்தில் புலிகரை, எர்ரணஅள்ளி, அமானி மல்லாபுரம், காடுசெட்டிப்பட்டி, பஞ்சப்பள்ளி ஆகிய பகுதிகளில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிதாக அமைக்கப்பட்ட தார்சாலை பணிகள், சிறு பாலங்கள் மற்றும் கழிவுநீர் கால்வாய் பணிகளின் முடிக்கப்பட்ட வேலை மற்றும் தரம் குறித்து சேலம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாலைகளை அகலப்படுத்துதல் மற்றும் புதிதாக போடப்பட்ட சாலையின் தரம் மற்றும் அளவுகளை ஆய்வு செய்தார். மேலும் சாலை பராமரிப்பு குறித்து நெடுஞ்சாலை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் நாகதாசம்பட்டி நெடுஞ்சாலையோரம் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். அப்போது உதவி கோட்ட பொறியாளர், உதவி பொறியாளர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.