சிந்தல்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தரச்சான்று குழுவினர் ஆய்வு
மொரப்பூர்:
கடத்தூர் ஊராட்சி ஒன்றியம் சிந்தல்பாடி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இதற்கு தேசிய தரச்சான்று வழங்குவதற்காக, டெல்லி தேசிய தரச்சான்று குழு அதிகாரிகள் டாக்டர் ஹாபாம் டேனிசிங், லைஸ் ராம் கோஜேந்திரசிங் ஆகியோர் அடங்கிய குழுவினர் சிந்தல்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறைகள், நோயாளிகளிடம் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் நடந்து கொள்ளும் விதங்கள், மருத்துவ கருவிகள், பரிசோதனை கூடங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தனர். இந்த ஆய்வின் போது வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அரசு, மருத்துவ அலுவலர்கள் டாக்டர் வனிதா, டாக்டர் திலகர் மற்றும் டாக்டர்கள் திவ்யா, சிந்தல்பாடி ஊராட்சி மன்ற தலைவர் பத்மாவதி, துணைத் தலைவர் தேவகி, சுகாதார ஆய்வாளர்கள் கரிகாலன், சிவலிங்கம், விஜயானந்த் உள்பட பலர் உடன் இருந்தனர்.