உரம் விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

உரம் விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர்.

Update: 2022-11-28 17:35 GMT

பரமக்குடி, 

பரமக்குடி பகுதியில் உள்ள உரம் விற்பனை நிலையம் மற்றும் விதைகள் விற்பனை நிலையங்களில் ராமநாதபுரம் மாவட்ட விதை சான்று இயக்குனர் வளர்மதி திடீரென ஆய்வு செய்தார். அப்போது விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரங்கள் மற்றும் விதைகள் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறதா? விற்பனை செய்யும் ஆவணங்கள் முறையாக பராமரிக்கப் படுகிறதா? விவசாயிகளுக்கு வழங்கும் விதைகளில் தரம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு உரங்கள் மற்றும் விதைகளை விற்பனை செய்ய வேண்டும். கூடுதல் விலைக்கு விற்பதாக தகவல் வந்தால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார். இந்த ஆய்வின் போது விதை ஆய்வு துணை இயக்குனர் துரை கண்ணம்மாள், விதைச்சான்று உதவி இயக்குனர்கள் சிவகாமி, மதுரைச்சாமி, திருப்புல்லாணி வட்டார உதவி இயக்குனர் அமர்லால், விதை ஆய்வாளர் ஜெயந்தி மாலா, விதை சான்று அலுவலர்கள் சிராலன் வீரபாண்டி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்