பண்ணை குட்டையை அமைச்சர் நேரில் ஆய்வு

பிக்கனஅள்ளி ஊராட்சியில் தரிசு நில மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நீர் சேமிப்பதற்கான பண்ணை குட்டை அமைக்கும் பணியை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2022-07-22 16:32 GMT

பிக்கனஅள்ளி ஊராட்சியில் தரிசு நில மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நீர் சேமிப்பதற்கான பண்ணை குட்டை அமைக்கும் பணியை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அமைச்சர் நேரில் ஆய்வு

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் மூலம் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் பிக்கனஅள்ளி ஊராட்சியில் பிக்கனஅள்ளி தரிசு நில தொகுப்பு குழு சங்கத்தின் சார்பில் 13 விவசாயிகள் ஒன்றிணைந்து 19.89 ஏக்கர் பரப்பளவில் உள்ள நிலத்தை மேம்படுத்தி வருகின்றனர். இந்த பணிகளை தமிழக வேலாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு விவசாயத்திற்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு உள்ளதையும், நீர் சேமிப்பதற்காக பண்ணை குட்டை அமைக்கப்பட்டு உள்ளதையும் அமைச்சர் பார்வையிட்டார்.

இதைத் தொடர்ந்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் 5 விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை அமைச்சர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அரசு செயலர்- வேளாண் உற்பத்தி ஆணையர் சமயமூர்த்தி, தர்மபுரி கலெக்டர் சாந்தி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தடங்கம் சுப்பிரமணி, இன்பசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு மற்றும் வேளாண்மை, தோட்டக்கலைக்கத்துறை அதிகாரிகள் உள்பட கலந்து கொண்டனர்.

மாவட்ட அளவிலான விருது

முன்னதாக தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் சொட்டு நீர்பாசனம் அடர் நடவு முறையினை சிறப்பாக செயல்படுத்தி மாவட்ட அளவில் சிறந்த விவசாயியாக தேர்வு பெற்ற குமரேசன் என்பவருக்கு மாவட்ட அளவிலான விருது தொகை ரூ.15,000-க்கான காசோலை, இயற்கை விவசாயம் தொழு உரம் பயன்படுத்தி தரிசு நில தோட்டக்கலை சாகுபடியை சிறப்பாக செயல்படுத்தி சிறந்த விவசாயியாக தேர்வு பெற்ற திருப்பதி ஆகியோருக்கு விருது தொகை ரூ.10,000-க்கான காசோலையை அமைச்சர் வழங்கி பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்