மொளசி காவிரி கரையோர பகுதிகளில் திருச்செங்கோடு உதவி கலெக்டர் திடீர் ஆய்வு

மொளசி காவிரி கரையோர பகுதிகளில் திருச்செங்கோடு உதவி கலெக்டர் திடீர் ஆய்வு

Update: 2022-07-12 14:11 GMT

எலச்சிபாளையம்:

திருச்செங்கோடு அருகே சோழசிராமணியில் காவிரியின் குறுக்கே கதவணை மின் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக தண்ணீர் தேக்கி வைக்கும்போது காவிரி கரையோரம் உள்ள விளை நிலங்களில் நீர் தேங்குகிறது. இதனால் அந்த விவசாய நிலங்களை மின்வாரியமே பெற்று கொள்ள முடிவு செய்துள்ளது. அதன்படி திருச்செங்கோடு அருகே மொளசியில் சுமார் 82 ஏக்கருக்கு மேல் உள்ள விளை நிலங்களில் காவிரி நீர் தேங்குகிறது. விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு இழப்பீடாக புதிய நில எடுப்பு சட்டப்படி இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். இதுதொடர்பாக திருச்செங்கோடு உதவி கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று உதவி கலெக்டர் இளவரசி மொளசி ஊராட்சிக்குட்பட்ட காவிரி கரையோர பகுதிகளுக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது நிலங்களில் தண்ணீர் தேங்கி பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒன்றுகூடி உதவி கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இந்த ஆய்வின்போது வருவாய் அலுவலர் அர்ஜூனன், கிராம நிர்வாக அலுவலர் முருகேசன், நில அலுவலர் மொளசி, ஊராட்சி மன்ற தலைவர் மீனாட்சி ராஜமாணிக்கம், விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்