உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை

காரைக்குடி மீன்மார்க்கெட் பகுதியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

Update: 2022-07-03 15:54 GMT

காரைக்குடி, 

காரைக்குடி மீன்மார்க்கெட் பகுதியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

புகார்

காரைக்குடி பகுதியில் உள்ள மீன் கடைகளில் தொடர்ந்து கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்தது. இதையடுத்து சிவகங்கை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி டாக்டர் பிரபாவதி உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் முத்துக்குமார் (காரைக்குடி), தியாகராஜன் (சாக்கோட்டை), உதவியாளர் கருப்பையா ஆகியோர் நேற்று காலை கழனிவாசல் பகுதியில் உள்ள மீன்மார்க்கெட் பகுதியில் திடீர் சோதனை செய்தனர்.

அப்போது கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த மீன்களை ஆய்வு செய்து அதில் எத்தனால் கலந்து விற்பனை செய்யப்படுகிறதா என்றும், கெட்டுப்போன மீன்கள் வைத்து விற்பனை செய்யப்படுகிறதா எனவும் ஆய்வு செய்தனர்.

எச்சரிக்கை

மேலும் கெட்டுப்போன மீன்களை வைத்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மீன் வியாபாரிகளை அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்