மீன்கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை
மீன்கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
திருப்புவனம்,
திருப்புவனம் நகரில் உள்ள மீன் கடைகளில் மீன்களின் தரம் குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதன்பேரில், நேற்று திருப்புவனம் வட்டார உணவு பாது காப்பு அதிகாரி சரவணகுமார் தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயராஜ், தூய்மை பணி மேற்பார்வையாளர்கள் ராஜேந்திரன், பாண்டி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் மீன் விற்பனை செய்யும் கடைகளில் திடீரென சோதனை செய்தனர். அப்போது பார்மலின் என்ற மருந்து கலந்து மீன்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. பார்மலின் கலந்த சுமார் 22 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது. மேலும் 3 கடைகளுக்கு அறிவிப்பு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.