சில்லாரஅள்ளி ஊராட்சியில்ரூ.1.10 கோடியில் தார்சாலை அமைக்கும் பணிகோவிந்தசாமி எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு

Update: 2023-09-02 19:30 GMT

தர்மபுரி:

பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட சில்லாரஅள்ளி ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் புதிதாக தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை கோவிந்தசாமி எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் இந்த தார்சாலை இடையே அமைக்கப்பட்டு வரும் சிறு பாலங்கள் அமைக்கும் பணியையும் அவர் ஆய்வு செய்தார். இந்த பணியை குறித்த காலத்துக்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது கடத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் முருகன், ஊராட்சி மன்ற தலைவர் ஹரியா அர்ஜூனன், துணைத்தலைவர் சண்முகம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்