ராசிபுரம் நெடுஞ்சாலை உட்கோட்டத்தில்சாலை பணிகளை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

Update: 2023-07-31 19:00 GMT

ராசிபுரம்:

ராசிபுரம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம் மற்றும் திட்டம் சாரா பணிகளை சேலம் நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாட்டமங்கலம் பகுதியில் புதுப்பிக்கப்பட்ட ஏழூர் முதல் குருசாமிபாளையம் செல்லும் சாலையின் தார் தளத்தின் தரம் மற்றும் கணத்தை அவர் ஆய்வு செய்தார்.

மேலும் ராசிபுரம் நெடுஞ்சாலை உட்கோட்டத்தில் தற்போது நடைபெற்று வரும் சாலையை அகலப்படுத்தி மேம்பாடு செய்தல், புறவழிச்சாலை பாலப்பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க அறிவுரை வழங்கினார். சாலை பராமரிப்பு பணிகளான பாலம் சுத்தம் செய்யும் பணியை இந்த மாதத்திற்குள் விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது கோட்ட பொறியாளர் திருகுணா, ராசிபுரம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உதவி கோட்ட பொறியாளர் ஜெகதீஷ் குமார், உதவி பொறியாளர் மணிகண்டன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்