தர்பூசணி வயலில் நிபுணர்கள் ஆய்வு

தர்பூசணி வயலில் நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.

Update: 2023-04-20 19:15 GMT

உலக வங்கி நிதியின் கீழ் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டம், மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் தர்பூசணி சாகுபடியை மேம்படுத்தும் வகையில் செம்பனார்கோவில் வட்டாரம் திருக்கடையூர் ஊராட்சிக்கு உட்பட்ட சிங்கனோடை கிராமத்தை சேர்ந்த விவசாயிக்கு 0.50 எக்டேர் பரப்பளவில் தர்பூசணி சாகுபடி செய்வதற்கு மானியம் வழங்கப்பட்டது. மேலும் மேற்கண்ட பகுதியில் மணல் திடல்களில் தர்பூசணி அதிகளவில் பயிரிடுவது குறித்து ஆய்வு நடந்துள்ளது. இந்த நிலையில் அங்கு தர்பூசணி சாகுபடி செய்யப்பட்ட வயலை உலக வங்கி பிரதிநிதி சாஜன் குரியன், தோட்டக்கலை நிபுணர் வித்யாசாகர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது தோட்டக்கலை துணை இயக்குனர் (பொறுப்பு) ரமேஷ், தோட்டக்கலை அலுவலர் கவி ராகவி, சீர்காழி தோட்டக்கலை அலுவலர் பார்கவி மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்