தர்மபுரி அவ்வையார் அரசு பெண்கள் பள்ளியில் வானவில் மன்ற செயல்பாடுகளை கலெக்டர் ஆய்வு

Update: 2022-12-03 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வானவில் மன்ற செயல்பாடுகளை கலெக்டர் சாந்தி ஆய்வு செய்தார்.

வானவில் மன்றம்

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தை தூண்டும் வகையில் வானவில் மன்றம் என்ற திட்டத்தினை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பல்வேறு அரசு பள்ளிகளில் வானவில் மன்றம் தொடங்கப்பட்டது.

தர்மபுரி அரசு அவ்வையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வானவில் மன்றம் தொடங்கப்பட்டு உள்ளது. இதனிடையே வானவில் மன்றத்தின் செயல்பாடுகள் மற்றும் மாணவியர்கள் மேற்கொண்ட அறிவியல் பரிசோதனைகளை மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

அறிவுரை

அப்போது அறிவியல் மற்றும் கணித பாடங்களை மாணவிகள் ஆர்வத்துடன் படிக்க வேண்டும். வானவில் மன்றத்தில் மாணவிகள் தங்களை இணைத்து கொண்டு அறிவியல் சோதனைகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்ட கல்வி அலுவலர் ராஜகோபால், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் மஞ்சுளா, உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார், பள்ளி தலைமை ஆசிரியை தெரேசாள், தாசில்தார் ராஜராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்