உடையார்பாளையத்தில் அரசு கல்லூரி அமைக்க வலியுறுத்தல்

உடையார்பாளையத்தில் அரசு கல்லூரி அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.;

Update: 2022-12-18 19:30 GMT

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தில் அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பு சார்பில் தேசிய ஓய்வூதியர்கள் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு நகர தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் நடேசன், சுந்தரேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக உதவி சித்த மருத்துவ அலுவலர் சையதுகரீம், இந்தியன் வங்கி கிளை மேலாளர் வெங்கடேஷ், நல்லாசிரியர் ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். நீத்தார் நிதி உதவி திட்ட செயலாளர் ராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். விழாவில், ஜெயங்கொண்டத்தில் உள்ள அரசு கலை கல்லூரியை உடையார்பாளையத்திற்கு மாற்ற வேண்டும். உடையார்பாளையத்தில் இயங்கி வந்த கல்வி மாவட்டத்தை மீண்டும் இங்கு செயல்படுத்த வேண்டும். புதிதாக கால்நடை மருத்துவமனை திறக்கப்படுவதற்கு நன்றி தெரிவிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்