காசி, ராமேசுவரம் போன்று பழனியை புனித நகராக அறிவிக்க வலியுறுத்தல்
காசி, ராமேசுவரம் போன்று பழனியை புனித நகராக அறிவிக்க வேண்டும் என்று மலைக்கோவில் பாதுகாப்பு பேரவை வலியுறுத்தியுள்ளது.
பழனி மலைக்கோவில் பாதுகாப்பு பேரவையின் ஆலோசனை கூட்டம், அடிவாரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பா.ஜ.க., இந்து முன்னணி உள்பட பல்வேறு இந்து அமைப்பின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், பழனி முருகன் கோவில் மற்றும் அதன் உபகோவில்களில் 'இந்துக்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்' என அறிவிப்பு பலகை வைக்க வேண்டும், காசி, ராமேசுவரம் போன்று பழனியை புனித நகராக அறிவிக்க வேண்டும், பக்தர்களை பாதிக்கும் தரிசன கட்டண வசூல் முறையை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.