70 வயது கடந்த ஓய்வூதியர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்

70 வயது கடந்த ஓய்வூதியர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தப்பட்டது.

Update: 2023-06-08 18:30 GMT

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் பெரம்பலூர் வட்டத்தின் 2-வது பேரவை கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு சங்கத்தை சேர்ந்த ராஜேந்திரன் தலைமை தாங்கினார். செயலாளா் ராஜேந்திரன் சங்கத்தின் வேலை அறிக்கையையும், பொருளாளர் சங்கத்தின் நிதிநிலை அறிக்கையையும் வாசித்தனர். சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் கருத்துரை வழங்கினார். மாவட்ட தலைவர் ஆளவந்தார் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் ஒடிசா ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் கூட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும். 70 வயது கடந்தவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். அகவிலைப்படி நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும், மத்திய அரசு அகவிலைப்படி வழங்கும் தேதியிலேயே மாநில அரசும் அகவிலைப்படியினை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்