சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு கூடுதல் சிறப்பு ரெயில்களை இயக்க வலியுறுத்தல்

தொடர் விடுமுறையையொட்டி தென் மாவட்டங்களுக்கு தென்னக ரெயில்வே கூடுதல் சிறப்பு ெரயில்களை இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2023-08-11 18:45 GMT

விருதுநகர்

தொடர் விடுமுறையையொட்டி தென் மாவட்டங்களுக்கு தென்னக ரெயில்வே கூடுதல் சிறப்பு ெரயில்களை இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொடர் விடுமுறை

சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் தொடர் விடுமுறையால் சென்னையில் வசிக்கும் தென் மாவட்ட மக்கள் சொந்த ஊருக்கு செல்ல விரும்பும் நிலையில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரெயில்களிலும் முன்பதிவு முடிந்து காத்திருப்போர் பட்டியலிலும் அதிகம் பேர் உள்ளனர். மேலும் தமிழக மக்கள் சாலை மார்க்கமாக செல்வதை விட பாதுகாப்பான பயணம் ரெயில் பயணம் என்று விரும்பும் நிலையில் ரெயில்வே நிர்வாகம் பொதுமக்களுக்கு வசதியாக கூடுதல் ரெயில்களை இயக்க வேண்டியது அவசியமாகும். இந்நிலையில் ஒரே ஒரு கூடுதல் சிறப்பு ெரயிலை மட்டும் இயக்குவதாக தென்னக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

புறக்கணிப்பு

ஒரு வழி பாதையாக இருக்கும் போதே சிறப்பு ரெயில்கள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது தென் மாவட்டங்களுக்கு இருவழி ரெயில் பாதை பயன்பாட்டிற்கு வந்த பின்பும் ரெயில்வே நிர்வாகம் கூடுதல் ரெயில்களை இயக்க தயங்குவது புரியாத நிலையாக உள்ளது.

மாநில அரசு தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து 1100 அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் தென்னக ரெயில்வே நிர்வாகம் கூடுதல் சிறப்பு ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுக்காமல் தென் மாவட்டங்களை புறக்கணிப்பதாக பல்வேறு தரப்பினர் கூறிவருகின்றனர்.

கோரிக்கை

எனவே தென்னக ரெயில்வே நிர்வாகம் தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு கூடுதல் சிறப்புரயில்களை இயக்கவும் செங்கோட்டை மார்க்கமாகவும் சிறப்பு ரெயில்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரெயில் பயணிகள் நலச் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்