மாணவர்களுக்கு கல்வெட்டு வாசிப்பு பயிற்சி

மாணவர்களுக்கு கல்வெட்டு வாசிப்பு பயிற்சி நடைபெற்றது.

Update: 2023-04-18 18:21 GMT

கந்தர்வகோட்டை சிவன் கோவிலில் உள்ள கல்வெட்டுகளை வாசிப்பதற்கான பயிற்சி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பில் நடைபெற்றது. இதில் சிவன் கோவிலில் உள்ள பழமையான 10-ம் நூற்றாண்டு கல்வெட்டு, கருவறை தூணில் காணப்படுகின்ற 13-ம் நூற்றாண்டு கல்வெட்டுகள், கோவில் முன் மண்டப பலகை கல்லில் காணப்படும் கல்வெட்டுகள், தூண்களில் 14, 15-ம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுகள் காணப்படுகின்றன. பல்வேறு காலகட்டங்களை சேர்ந்த கல்வெட்டுகளில் காணப்படும் எழுத்துருக்களின் மாறுபாடுகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துக் கூறி மாணவர்கள் வாசிப்பதற்கான பயிற்சி வழங்கப்பட்டது. இந்த கல்வெட்டு வாசிப்பு பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் மாணவர்களுக்கு வாசிப்பதற்கான பயிற்சிகளை வழங்கினார். இதில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கெடுத்து கல்வெட்டுகளை வாசிக்க பயிற்சி எடுத்துக் கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்