விவசாயிகளுக்கு இடுபொருட்கள்

விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்டன

Update: 2022-05-25 16:44 GMT

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட தொடக்க விழா நடைபெற்றது. கீழப்பாவூர் யூனியன் தலைவி காவேரி தலைமை தாங்கினார். கல்லூரணி பஞ்சாயத்து தலைவர் ராஜ்குமார், அட்மா தலைவர் காந்திராமன், வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், வேளாண்மை உதவி இயக்குனர் சேதுராமலிங்கம், உதவி வேளாண்மை அலுவலர் மாரியப்பன், துணை வேளாண்மை அலுவலர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு விசைத்தெளிப்பான்கள், தென்னை மரக்கன்றுகள், இயற்கை உரங்கள், கைத்தெளிப்பான் ஆகியனவும், தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கனி விதைகள், பழக்கன்றுகள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்