இண்டூர் அருகேபுளியமரத்தில் பஸ் மோதி 25 பேர் காயம்

Update: 2023-09-20 19:30 GMT

பாப்பாரப்பட்டி:

தர்மபுரி பஸ் நிலையத்தில் இருந்து நேற்று மாலை தனியார் பஸ் ஒகேனக்கல்லுக்கு சென்றது. பஸ்சை டிரைவர் வீரமணி (51) என்பவர் ஓட்டிச் சென்றார். இதில் 90 பயணிகள் இருந்தனர்.. இண்டூர் அருகே மல்லாபுரம் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது பஸ்சின் அச்சு முறிந்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்து பஸ் சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதியது. இந்த விபத்தில் பஸ்சின் முன் பகுதி நொறுங்கியது. விபத்தில் டிரைவர் உள்பட 25 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து பஸ் பயணிகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் காயம் அடைந்தவர்களை மீட்டு் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து இண்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்