ஓசூரில் தெருநாய்கள் கடித்து 7 பேர் காயம்

Update: 2023-08-05 19:30 GMT

ஓசூர்:

ஓசூர் மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் நடமாடும் சூழ்நிலை உள்ளது. சாலைகளில் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரியும் தெருநாய்களால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ஓசூர் முனீஸ்வர் நகரில் முதியவர் ஒருவரை தெருநாய் கடித்ததில் அவருக்கு கால்களில் பலத்த காயம் அடைந்து. பின்னர் அவர் சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். இதேபோல் நகரின் பல்வேறு இடங்களில் 6 பேர் தெருநாய்கள் கடித்து சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். இதனால் அந்த வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்