பாப்பிரெட்டிப்பட்டி அருகே விபத்தில் தொழிலாளி படுகாயம்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே விபத்தில் தொழிலாளி படுகாயம்

Update: 2022-10-08 18:45 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த தோழனூரை சேர்ந்தவர் மாது (வயது 57). கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலை தனது மொபட்டில் கூலி வேலைக்காக அதே ஊரை சேர்ந்த கோவிந்தன் என்பவரை பின்னால் உட்கார வைத்துக் கொண்டு அம்மாபாளையத்தில் வேலைக்கு சென்றனர். அங்கு வேலை இல்லாத காரணத்தால் மீண்டும் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது கோபாலபுரத்தில் உள்ள ஒரு மில் ரோட்டில் அன்பில் நகர் அருகே வந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் அதிக வேகமாக வந்தவர் மோதியதில் மாது பலத்த காயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து மாது பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்