வீடுகளுக்கு முன்பு காலி மதுபாட்டில்களை போட்டு செல்லும் மதுபிரியர்கள்
வீடுகளுக்கு முன்பு காலி மதுபாட்டில்களை போட்டு செல்லும் மதுபிரியர்கள்
உடுமலை
உடுமலையில் வீடுகளுக்கு முன்பு காலி மதுபாட்டில்களை மதுபிரியர்கள் வீசி செல்வதால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
டாஸ்மாக் கடை
உடுமலை யசோதா ராமலிங்கம் லே-அவுட் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் மதுவிற்பனை அதிகமாக உள்ளது. மதுபிரியர்கள் குடியிருப்பு பகுதியில் திறந்த வெளியையும் பார் போன்று பயன்படுத்தி வருகின்றனர்.அதனால் டாஸ்மாக் கடைபகுதியில் மதுபாட்டில்கள், அட்டை பெட்டிகள், மது அருந்தபயன் படுத்திய பிளாஸ்டிக் டம்ளர்கள் ஆகியவை குவிந்து கிடக்கிறது. மதுபாட்டில்கள், அட்டைபெட்டிகள், பிளாஸ்டிக் டம்ளர்களை வீடுகளுக்கு முன்பும் போட்டுவிட்டு செல்கின்றனர்.
அத்துடன் மதுபோதையில் தள்ளாடியபடி வரும் மதுபிரியர்களால், அங்கு குடியிருக்கும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வரவே அச்சப்படுகின்றனர். அந்த பகுதியில் குவிந்து கிடக்கும் மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள் ஆகியவற்றால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அதனால் அவற்றை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்
நடவடிக்கை
நகராட்சிஅதிகாரிகள், கடைகளில் ஆய்வு மேற்கொண்டு பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். ஆனால் ஒருமுறையே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் டம்ளர்கள், டாஸ்மாக் கடைகளில் பயன்படுத்தப்படுகிறது. இவை எங்கிருந்து வருகிறது என்பதை கண்டறிந்து அந்த பிளாஸ்டிக் பொருட்கள் வருவதைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.