ஊர்க்காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 19-ந் தேதி உடல் தகுதி தேர்வு போலீஸ் சூப்பிரண்டு தகவல்

ஊர்க்காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 19-ந் தேதி உடல் தகுதி தேர்வு நடக்க உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.

Update: 2023-02-15 18:45 GMT

சிவகங்கை, 

சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 90 ஆண்கள் மற்றும் 19 பெண்கள் உள்பட 109 ஊர்க்காவலர் பணியிடங்களை நிரப்ப கடந்த டிசம்பர் மாதம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இந்த பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வருகிற 19-ந் தேதி சிவகங்கை ஆயுதப்படை மைதானத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதி தேர்வு நடைபெற உள்ளது. எனவே இந்த பணிக்கு விண்ணப்பித்தவர்கள் தகுதி தேர்வில் தவறாது கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்