மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9,600 கன அடியாக நீடிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9,600 கன அடியாக நீடிக்கிறது.

Update: 2022-12-17 07:03 GMT

மேட்டூர், 

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சரிந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில், நேற்று முன்தினம் விநாடிக்கு 16 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 14 ஆயிரம் கன அடியாக சரிந்து உள்ளது.

அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 14,600 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 9,600 கன அடியாக சரிந்தது. இன்று காலையும் அணைக்கு விநாடிக்கு 9,600 கனஅடியாக நீர்வரத்து நீடிக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 9,000 கன அடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 600 கன அடியும் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்