செஞ்சி அருகேபச்சிளம் குழந்தை குப்பைத்தொட்டியில் வீச்சு

செஞ்சி அருகே குப்பைத்தொட்டியில் பச்சிளம் குழந்தையை வீசிச் சென்றவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2023-03-30 18:45 GMT

செஞ்சி, 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த முட்டத்தூர் கிராம பஸ் நிறுத்தம் அருகே உள்ள குப்பைத்தொட்டியில் இருந்து நேற்று காலை குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதைகேட்ட அங்கு பஸ்சுக்காக காத்திருந்த பொதுமக்கள் குப்பைத்தொட்டியில் பார்த்தபோது, அதில் பிறந்து சிலமணி நேரங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று அழுதபடி கிடந்ததும், அந்த குழந்தையை யாரோ? குப்பைத்தொட்டியில் வீசிச் சென்றிருப்பதும் தெரியவந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், அந்த குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக ஒட்டம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு அந்த குழந்தைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். பின்னர் அந்த குழந்தை, விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

தொடா்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் கஞ்சனூர் போலீசார் வழக்குப்பதிந்து, பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசிச் சென்ற கல்நெஞ்சம் படைத்த பெண் யார்?, கள்ளக்காதலில் பிறந்ததால் குழந்தையை வீசிச்சென்றாரா?, அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்