100 பயனாளிகளுக்கு விலையில்லா வெள்ளாடுகள்
உம்பளச்சேரி ஊராட்சியில் 100 பயனாளிகளுக்கு விலையில்லா வெள்ளாடுகள் வழங்கப்பட்டது.
வாய்மேடு:
தலைஞாயிறு ஒன்றியம் உம்பளச்சேரி ஊராட்சியில் பயனாளிகளுக்கு விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.இந்த நிகழ்ச்சிக்கு தலைஞாயிறு ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி தலைமை தாங்கினார். மாநில விவசாயிகள் ஆலோசனைக் குழு உறுப்பினர் மகாகுமார், கால்நடை துறை துணை இயக்குனர் சுப்பையன், உதவி இயக்குனர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் 100 பயனாளிகளுக்கு தலா 5 ஆடுகள் வீதம் 500 ஆடுகள் வழங்கப்பட்டது. முன்னதாக தலைஞாயிறு கால்நடை உதவி மருத்துவ அலுவலர் ஸ்ரீதர் பாபு வரவேற்றார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கற்பகம் நீலமேகம், சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.