ஆனைமலை
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று பாக்கு மற்றும் உரித்த தேங்காய்க்கு மறைமுக ஏலம் நடைபெற்றது. 12 விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் இருந்து 60 தேங்காய் மூட்டைகளை கொண்டு வந்தனர். 5 வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர். தேங்காய் கிலோவிற்கு 16 ரூபாயில் இருந்து 24 ரூபாய் 20 காசுகள் வரை ஏலம் சென்றது. இதேபோன்று பாக்கு ஏலத்தில் 1 விவசாயி தனது விளைநிலத்தில் இருந்து 1 மூட்டை பாக்கு காய்களை கொண்டு வந்தார். 2 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். கிலோவிற்கு அதிகபட்சமாக 391 ரூபாய்க்கு பாக்கு ஏலம் சென்றது என்று ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரி செந்தில் முருகன் தெரிவித்தார்.