இந்திரா காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

செங்கோட்டையில் இந்திரா காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.;

Update: 2022-10-31 18:45 GMT

செங்கோட்டை:

செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நகர தலைவா் ராமர் தலைமை தாங்கினார். நகர்மன்ற உறுப்பினா் முருகையா, நகர செயலாளா் இசக்கியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். அலங்கரிக்கப்பட்ட இந்திரா காந்தியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்