இந்திராகாந்தி பிறந்தநாள் விழா
செங்கோட்டையில் இந்திராகாந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
செங்கோட்டை:
செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு வைத்து நகர காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமா் இந்திராகாந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு நகர தலைவா் ராமர் தலைமை தாங்கினார். நகர துணைத்தலைவா் செண்பகம், நகர்மன்ற உறுப்பினா் முருகையா, நிர்வாகக்குழு உறுப்பினா் செல்வகணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனா். நகர இளைஞரணி செயலாளா் ராஜீவ்காந்தி அனைவரையும் வரவேற்று பேசினார்.
விழாவில் அலங்கரிக்கப்பட்ட இந்திராகாந்தியின் உருவப்படத்துக்கு நிர்வாகிகள் மலா் தூவி மரியாதை செலுத்தினர். பின்னா் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகர செயலாளா் இசக்கியப்பன், நிர்வாகிகள் நடராஜன், கோதர்அலி, நல்லையா, ரவி என்ற முருகேசன், சண்முகையா உள்பட பலா் கலந்து கொண்டனா்.