இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம்

நெல்லை மேலப்பாளையத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-07-16 20:04 GMT

இந்திய யூனியன் முஸ்லிம்லீக் கட்சி சார்பில் நெல்லை மேலப்பாளையத்தில் பொது சிவில் சட்டத்தை கைவிட வலியுறுத்தி நேற்று மதியம் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு நகர தலைவர் முகைதீன் அப்துல்காதர் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் எல்.கே.எஸ். மீரான்மைதீன், செயலாளர் பாட்டப்பத்து முகமது அலி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்