ஆன்மீக சுற்றுலாக்களை நடத்தி வரும் இந்திய ரயில்வே.. புரட்டாசி அமாவாசைக்கு விமான சுற்றுலா.!
மதுரையிலிருந்து புரட்டாசி மஹாளய அமாவாசைக்கு காசிக்கு விமான சுற்றுலா பயத்தை மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மதுரை,
இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் மதுரையிலிருந்து பல்வேறு ஆன்மீக சுற்றுலாக்களை நடத்தி வருகிறது.
தற்பொழுது புரட்டாசி மஹாளய அமாவாசையை முன்னிட்டு மதுரையிலிருந்து கயா, வாரணாசி மற்றும் அலகாபாத் போன்ற ஆன்மிக தலங்களுக்கு விமானம் மூலம் சுற்றுலா நடத்த இருக்கிறது.
இந்த 6 நாட்கள் சுற்றுலா செப்டம்பர் 24 அன்று மதுரையில் இருந்து துவங்கும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.