இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-12-10 18:38 GMT

இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் நெல்லை வண்ணார்பேட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பால்ராஜ் தலைமை தாங்கினார். மூட்டா மண்டல செயலாளர் சிவஞானம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

தேசிய கல்விக்கொள்கை 2020-ஐ திரும்ப பெற வேண்டும் தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் பால்கதிரவன், மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலர் சங்கர் மாநிலச் செயலாளர் ஐவன், கூட்டுறவு துறை ஊழியர் சங்க பொதுச்செயலாளர் ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்