இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கூட்டம்
திருவாரூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கூட்டம் நடந்தது.
திருவாரூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பேரவை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் வேலவன் தலைமை தாங்கினார். மாநில தலைவர்கார்த்தி, மாநில செயலாளர் சிங்காரவேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். படித்த இளைஞர்களுக்கு நிபந்தனையின்றி தாட்கோ மூலம் கடன் வழங்க வேண்டும். அனைத்து ஊராட்சி, நகராட்சிகளிலும் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.இதில் மாவட்ட செயலாளர் சலாவுதீன், பொருளாளர் கேசவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்