இந்திய கம்யூனிஸ்டு போராட்டம்; 21 பேர் கைது
சிவகிரி அருகே ராயகிரியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக 21 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகிரி:
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து சிவகிரி அருகே ராயகிரியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு ராயகிரி நகர செயலாளர் சின்ன வேலுச்சாமி தலைமை தாங்கினார். முன்னாள் செயலாளர் சமுத்திரம், தென்காசி மாவட்ட மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஜோலியர் கந்தம்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டம் நடத்திய 6பெண்கள் உள்பட மொத்தம் 21பேரை சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.