இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
விருதுநகர் தேசபந்துதிடலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி. லிங்கம் தலைமையில் மணிப்பூரில் வன்முறையை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்தும், தமிழக கவர்னர் ரவியை திரும்ப பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய குழு உறுப்பினர் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னு பாண்டியன், கட்சி நிர்வாகிகள் பாலமுருகன், முத்துக்குமார், சக்கணன், சமுத்திரம், பழனிக்குமார், முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.