இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம் நடந்தது;

Update: 2023-07-11 18:45 GMT

சிவகங்கை, ஜூலை.12-

மணிப்பூரில் நடைபெறும் கலவரத்தை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் சிவகங்கை ராமச்சந்திரா பூங்கா அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் கண்ணகி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் கோபால், சிவகங்கை நகர் செயலாளர் மருது, காரைக்குடி நகர் செயலாளர் சிவாஜி காந்தி, ஒன்றிய செயலாளர்கள் சின்ன கருப்பு (சிவகங்கை), மோகன் (திருப்புவனம்), காளிமுத்து (திருப்பத்தூர்) சங்கையா (மானாமதுரை), மெய்ஞான மூர்த்தி (காளையார் கோவில்), ராமநாதன் (இளையான்குடி) மற்றும் மாதர் சங்க நிர்வாகிகள் மீனா சேதுராமன், குஞ்சரம் காசிநாதன், சிவகங்கை நகர் துணை செயலாளர் பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்