விழுப்புரம்இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு நிறுவனத்தில் பயிற்சிகள் தொடக்கம்

விழுப்புரம் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு நிறுவனத்தில் பயிற்சிகள் தொடங்கப்படவுள்ளது.;

Update: 2023-03-14 18:45 GMT

விழுப்புரம் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் ஏப்ரல் மாதத்திற்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் எம்ப்ராய்டரி மற்றும் துணி ஓவியம், ஆரியர் வேலைப்பாடு பயிற்சிக்கான நேர்காணல் வருகிற 20-ந் தேதியும், பயிற்சி வகுப்பு 27-ந் தேதியன்றும் நடைபெறவுள்ளது. கறவை மாடு வளர்த்தல் மற்றும் மண்புழு உரம் தயாரித்தலுக்கான நேர்காணல் 21-ந் தேதி நடைபெறும். இதன் பயிற்சி வகுப்பு 28-ந் தேதி தொடங்குகிறது. பாஸ்ட் புட் (துரித உணவு) தயாரித்தல் நேர்காணல் 23-ந் தேதி நடைபெறுகிற நிலையில் அதன் பயிற்சி வகுப்பு அடுத்த மாதம் (ஏப்ரல்) 10-ந் தேதி தொடங்கப்படவுள்ளது.

இப்பயிற்சி வகுப்பிற்கு 18 முதல் 45 வயதிற்குட்பட்டவர்களாவும், 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் தங்கள் பெயரிலோ அல்லது குடும்பத்தினர் பெயரிலோ மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் அட்டை வைத்திருந்தால் முன்னுரிமை வழங்கப்படும். கிராம பகுதிகளை சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்கள் நேர்காணலுக்கு வருகை தரும்போது ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல், கல்வி சான்றிதழ் நகல், வங்கி கணக்கு புத்தகம் நகல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டத்தின் அட்டைநகல் கொண்டு வர வேண்டும். மேலும் இதன் தொடர்பான விவரங்களுக்கு விழுப்புரம் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தை 04146-294115, 7598466681 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்