'இந்தியா' கூட்டணி ஆலோசனை கூட்டம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் ரத்து

தி.மு.க. எம்.பி., டி.ஆர்.பாலு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

Update: 2024-05-31 09:09 GMT

சென்னை,

இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் டெல்லியில் நாளை (1-ம் தேதி) ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளனர். காங்கிரஸ், தி.மு.க, சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 28 கட்சி தலைவர்களுக்கும் டெல்லியில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல் வெளியானது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக தி.மு.க. தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு நாளை (1-ம் தேதி) பயணம் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், முதல்-அமைச்சரின் டெல்லி பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக தி.மு.க எம்.பி., டி.ஆர்.பாலு டெல்லி செல்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்