சோளிங்கர் நகராட்சி கூட்டத்தில் சுயேச்சை கவுன்சிலர் தர்ணா

சோளிங்கர் நகராட்சி கூட்டத்தில் சுயேச்சை கவுன்சிலர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-08-30 18:48 GMT

சோளிங்கர்

சோளிங்கர் நகராட்சி கூட்டத்தில் சுயேச்சை கவுன்சிலர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சோளிங்கர் நகர்மன்ற சாதாரண கூட்டம் நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி அசோகன் தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் பழனி, ஆணையாளர் பரந்தாமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் தங்கள் வார்டுகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து காரசாரமாக விவாதத்தில் ஈடுபட்டனர்.

கூட்டத்தில் 8-வது வார்டு உறுப்பினர் டி.கோபால் பேசும் போது ''குடோன்‌ என்ற பெயரில் திருமண மண்டபங்கள் இயங்கி வருகிறது. இதனால் நகராட்சிக்கு பல லட்ச ரூபாய் வருமான இழப்பு ஏற்படுகிறது. திருமண நாட்களில் திருமண மண்டபங்கள் முன்புகார், இருசக்கர வாகனங்களை இடையூறாக நிறுத்துவதால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே குடோன்கள் என்ற பெயரில் முறைகேடாக செயல்பட்டு வரும் திருமண மண்டபங்களை கணக்கிட்டு உரிய வரி வசூல் செய்ய வேண்டும்.

வாலாஜா சாலையில் உள்ள டாஸ்மாக் கடையால் தினசரி அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுகிறது. இந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்'' என்றார்.

சுயேச்சை உறுப்பினர் ஆஞ்சநேயர், பில்லாஞ்சி திடீர் நகரில் உள்ள சிறுபாலம் சேதமடைந்துள்ளது. இது குறித்து தினத்தந்தியிலும் செயணு்தி ெவேளியானது. ஆனால் அதனை சரி செய்யாததால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

திரவுபதி நகரில் ஒரு சில வீடுகள் பயன்பெறும் வகையில் பல லட்ச ரூபாய் மதிப்பில் செய்யவுள்ள பணிகளை அடிப்படை வசதிகள் கூட இல்லாத இடங்களில் மேற்கொள்ள வேண்டும் என கடந்த கூட்டத்தொடரில் அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக தெரிவித்தை நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுகிறது. இதனை கண்டிக்கத்க்கது என கூறி கூட்டம் தொடங்கியது முதல் முடியும் வரை நூதன முறையில் கவுன்சிலர்கள் இருக்கைகளுக்கு இடையே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

கூட்டத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் மழை நீர் வடிகால் வசதி, பொன்னையிலிருந்து சோளிங்கர் வரை பதிக்கப்பட்ட பழைய குடிநீர் குழாய்களுக்கு பதிலாக புதிய குழாய்கள் அமைப்பது, பொதுக்கழிப்பிடம் கட்டுதல் உள்ளிட்ட 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்