அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா

நெல்லையில் அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

Update: 2022-08-15 19:51 GMT

நெல்லையில் அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

மாநகராட்சி அலுவலகம்

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா நடந்தது. மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கி தேசிய கொடியேற்றினார். தொடர்ந்து மூத்த கவுன்சிலர்களுக்கு பாராட்டு சான்றிதழ், சிறந்த முறையில் பணியாற்றிய மாநகராட்சி அலுவலர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

துணை மேயர் கே.ஆர்.ராஜூ, ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, மண்டல தலைவர்கள் கதிஜா இக்லாம் பாசிலா, பிரான்சிஸ், ரேவதி பிரபு, மகேசுவரி, மாநகர பொறியாளர் அசோகன், செயற்பொறியாளர்கள் பாஸ்கர், வாசுதேவன், உதவி ஆணையாளர்கள் வெங்கட்ராமன், ஜஹாங்கீர் பாட்ஷா, சொர்ணலதா, உதவி செயற்பொறியாளர்கள் லெனின், ராமசாமி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது.

இதேபோல் மேலப்பாளையம் மண்டலத்தில் தலைவர் கதிஜா இக்லாம் பாசிலா, பாளையங்கோட்டை மண்டலத்தில் தலைவர் பிரான்சிஸ், தச்சநல்லூர் மண்டல அலுவலகத்தில் தலைவர் ரேவதி பிரபு, நெல்லை மண்டலத்தில் தலைவர், மகேசுவரி ஆகியோர் தேசிய கொடி ஏற்றினார்கள்.

நெல்லை டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் தாசில்தார் மோகன் தேசிய கொடி ஏற்றினார். பாளையங்கோட்டை அஞ்சல் பொருள் கிடங்கில் கிடங்கு மேலாளர் விக்டர் ஸ்டேனிஸ் லாஸ் தேசிய கொடி ஏற்றினார்.

ஊரக வளர்ச்சி திட்ட அலுவலகம்

நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகத்தில் திட்ட இயக்குனர் பழனி தேசிய கொடி ஏற்றி வைத்தார். உதவி திட்ட இயக்குனர் மனவள சங்கரி, கண்காணிப்பாளர் யமுனா உள்பட பலர் கலந்து கொண்டனர். நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலை, வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை ஆகியவற்றிற்கு ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் பழனி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் நிர்வாக இயக்குனர் மோகன் தேசிய கொடி ஏற்றினார். தொடர்ந்து பஸ்சில் தவறவிட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த கண்டக்டர் வைத்தியலிங்கம், இசக்கி முத்து ஆகியோர் ஆகியோரின் நற்செயலை பாராட்டி நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசினார். பொதுமேலாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்