அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா
விருதுநகரில் அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.;
விருதுநகரில் அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
மாவட்ட பஞ்சாயத்து
விருதுநகர் மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வசந்தி மான்ராஜ் தேசியக்கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். விருதுநகர் யூனியன் அலுவலகத்தில் யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், கற்பகவல்லி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நகரசபை அலுவலகத்தில் நகரசபை தலைவர் மாதவன் தேசிய கொடி ஏற்றினார். இந்நிகழ்ச்சியில் துணைத்தலைவர் தனலட்சுமி, கமிஷனர் லீனா சைமன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நினைவுத்தூண்
விருதுநகர் தேசபந்து திடலில் தியாகிகள் நினைவுத்தூணில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. விருதுநகர் பா.ஜனதா அலுவலகத்தில் மாவட்ட பா.ஜனதா தலைவர் பாண்டுரங்கன் தேசிய கொடி ஏற்றினார்.
மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் மாவட்ட பொருளாளர் பழனி குமார் தேசிய கொடி ஏற்றினார். இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் காதர் முகைதீன், சக்கணன், முருகேசன், முத்துக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அரசு பள்ளி
விருதுநகர் சூலக்கரையில் உள்ள அரசு செவித்திறன் குறையுடையோர் மேல்நிலைப்பள்ளியில் விருதுநகர் ரோட்டரி சங்கம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. சங்கத்தலைவர் சண்முகம் தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இதில் செயலாளர் ராஜீவன், உதவி ரோட்டரி கவர்னர் வடிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியை சிவகாமி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். அதேபோல விருதுநகர் மண்டல போக்குவரத்து கழக அலுவலகத்தில் பொது மேலாளர் துரைச்சாமி தேசிய கொடி ஏற்றினார். இதில் மக்கள் தொடர்பு அதிகாரி ஜெகவீரபாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.