திண்டுக்கல்லில் சுதந்திர தின விழா

திண்டுக்கல்லில் நடந்த சுதந்திர தினவிழாவில் கலெக்டர் விசாகன் தேசியக்கொடி ஏற்றினார்.

Update: 2022-08-15 20:20 GMT

சுதந்திர தினவிழா

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில், மாவட்ட விளையாட்டு அரங்கில் சுதந்திர தினவிழா நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். பின்னர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார்.மேலும் சமாதானத்தின் அடையாளமாக வெண் புறாக்களையும், மூவர்ண நிறத்திலான பலூன்களையும் கலெக்டர் பறக்க விட்டார். பின்னர் சிறப்பாக பணியாற்றிய கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன், போலீஸ் துணை சூப்பிரண்டு கோகுல கிருஷ்ணன் உள்பட 54 போலீசாருக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கப்பட்டன.

சான்றிதழ்கள், பதக்கங்கள்

அதைத்தொடர்ந்து கூட்டுறவுத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, வேளாண்துறை உள்பட அனைத்து துறைகளிலும் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்கள் 230 பேருக்கு பாராட்டு சான்றிதழ்கள், பதக்கங்களை கலெக்டர் வழங்கினார். பின்னர் 593 பயனாளிகளுக்கு ரூ.88 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். அதையடுத்து பள்ளி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. நாட்டுப்புற பாடல்கள், தேசப்பற்று பாடல்கள் என பல்வேறு பாடல்களுக்கு மாணவிகள் நடனம் ஆடி அசத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்