கடைத்தெரு வியாபாரிகள் சங்கம் சார்பில் சுதந்திர தின விழா

கொள்ளிடம் கடைத்தெரு வியாபாரிகள் சங்கம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது

Update: 2023-08-15 18:45 GMT

கொள்ளிடம்:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் கடைத்தெருவியாபாரிகள் சங்கம் சார்பில் 77-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா நடந்தது. விழாவுக்கு வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். முன்னதாக வியாபாரிகள் சங்க செயலாளர் இக்பால் வரவேற்றார். நிகழ்ச்சியில் குழந்தை நல டாக்டர் முருகேசன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசினார். பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் கொள்ளிடம் கடைத்தெரு வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், வணிகர்கள், சிறு கடை விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்கள கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் சரவணன் முத்து நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்