சுதந்திர தின விழா

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் சுதந்திர தின விழா

Update: 2022-08-16 17:14 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் சுதந்தர தினத்தை முன்னிட்டு கல்லூரி முதல்வர் சாம்ராஜ் தேசிய கொடியேற்றி சுதந்திர தின உரையாற்றினார். முன்னதாக 'சுதந்திரத்திருநாள் அமுதப்பெருவிழா' என்ற தலைப்பில்' 1-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை மாணவ, மாணவிகளுக்கு மினி மாரத்தான், கட்டுரை போட்டி, பேச்சு போட்டி, ஐவர் கால்பந்து போட்டி நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். மேலும், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தார்கள் கல்லூரிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக வரவழைக்கபட்டு கவுரவபடுத்தப்பட்டார்கள். மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு கல்லூரியின் சார்பாக தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சுதந்திர தின நிகழ்ச்சிகளை உதவி பேராசிரியர் செல்வக்குமார் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்