மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-11-24 19:58 GMT

மேட்டூர்,

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு கடந்த ஒரு வாரமாக வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. தற்போது டெல்டா பாசன பகுதிகளில் தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது.

இதைகருத்தில் கொண்டு நேற்று மாலை முதல் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் அணைக்கு நீர்வரத்தானது வினாடிக்கு 11 ஆயிரத்து 107 கனஅடியாக குறைந்துள்ளது.

அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 400 கனஅடி வீதமும், டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதமும் என மொத்தம் வினாடிக்கு 15 ஆயிரத்து 400 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீர்வரத்தை விட அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் குறைய வாய்ப்பு உள்ளது. நேற்று மாலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 120 அடியாக இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்