மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மேட்டூர்:
தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. அதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. குறிப்பாக நேற்று முன்தினம் வினாடிக்கு 6 ஆயிரத்து 922 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலையில் வினாடிக்கு 7 ஆயிரத்து 905 கனஅடியாக அதிகரித்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 109.02 அடியாக இருந்தது. அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.