கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

Update: 2023-08-26 06:35 GMT

மேட்டூர்,

கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இந்த தண்ணீர் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் வழியாக மேட்டூர் அணைக்கு வருகிறது. இதனிடையே கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பாக இரு மாநில அரசுகளுக்கு இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

இந்த நிலையில், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 5,121 கனஅடியில் இருந்து 8,038 கனஅடியாக உயர்ந்துள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 6,038 கனஅடியாக உயர்ந்திருக்கிறது. கபினி அணையிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றம் தொடர்ந்து 2,000 கனஅடியாக உள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்