மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 55 ஆயிரத்து 500 கனஅடிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Update: 2022-10-14 22:00 GMT

மேட்டூர் அணை

மேட்டூர் அணை கடந்த 12-ந் தேதி அதிகாலையில் இந்த ஆண்டில் 2-வது முறையாக நிரம்பியது. அணை நிரம்பியதை தொடர்ந்து அன்று காலை முதல் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் 16 கண் மதகுகள் வழியாக உபரி நீர் திறந்து விடப்பட்டது.

அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்ததால் மறுநாள் (13-ந் தேதி) 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பு வினாடிக்கு 23 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

இந்த நிலையில் நேற்று அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 55 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் அணையை ஒட்டி அமைந்துள்ள நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 21 ஆயிரத்து 500 கன அடி வீதமும், 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 33 ஆயிரத்து 500 கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று முதல் வினாடிக்கு 200 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்